என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஹிந்தியில் வரவேற்பை பெற்ற அந்தாதூன் படம் தமிழில் ரீ-மேக் ஆகி உள்ளது. தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள இந்த படத்திற்கு அந்தகன் என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தை தமிழகத்தில் எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த படத்தில் சந்தோஷ் நாராயணின் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் உருவான என் காதலும் என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடல் சில நாட்களிலேயே இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை செய்திருக்கிறது. அந்த வகையில் இதற்கு முன்பு சித் ஸ்ரீராம் பாடி ஹிட்டடித்த விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே, அண்ணாத்த படத்தின் சாரை காற்று, வலிமை படத்தின் அம்மா பாடல், புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி போன்ற ஹிட் பாடல்கள் வரிசையில் தற்போது இந்த பாடலும் இடம் பிடித்துள்ளது.