'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக பல நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். மீ டூ புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். தயாரிப்பாளர் முதல் பாடல் ஆசிரியர் வரை மீ டூ புகாரில் சிக்கினர்.
சினிமாவில் செல்வாக்கு மிக்க புன்புலத்தில் இருந்து வந்த நடிகைகளும் தங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ் சினிமாவின் பெரிய ஆளுமையான சரத்குமாரின் மகள் வரட்சுமி ஒரு தொலைக்காட்சியின் உயர் அதிகாரி தன்னை தவறாக அணுகியதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் செல்வாக்கு மிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மோகன்பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சுவும் தனக்கும் பாலியல் தொல்லை இருந்ததாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நானும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டுள்ளேன். சக்தி வாய்ந்த ஒருவரின் மகள் என்பதால், எனக்கு எதவும் அப்படி நடக்காது என்றுதான் ஆரம்பத்தில் நம்பி இருந்தேன். ஆனால் இரக்க மற்றவர்களை நானும் சந்திக்க வேண்டியது இருந்தது. என்று கூறியுள்ளார்.
இவர்களுக்கே இப்படி என்றால் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு மிகுந்த கவலை அளிப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.