நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
விக்ரம் - துருவ் விக்ரம் நடித்த மகான் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடித்து வந்த கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் மே மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான டப்பிங் பணிகளை விக்ரம் முடித்துவிட்ட நிலையில் இந்த படமும் இன்னும் ஓரிரு மாதங்களில் திரைக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் இந்த மூன்று படங்களும் திரைக்கு வருகின்றன.