விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் 23ல் தேர்தல் நடந்தது. இதில் நாசர் தலைமையிலான ஒரு அணியும், பாக்யராஜ் தலைமையிலான மற்றொரு அணியும் தேர்தலை சந்தித்தனர். முறையான வாக்காளர் பட்டியலை தயாரிக்காமல் தேர்தலை நடத்தினர். முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்தை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனால் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதுதவிர மேலும் சில வழக்குகள் தேர்தல் தொடர்பாக போடப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக விசாரித்த சென்னை ஐகோர்ட், நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட்டார். மீண்டும் தேர்தல் நடத்தவும், அதுவரை அரசு நியமித்த தனி அதிகாரி சங்கத்தை நிர்வகிப்பார் என உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து விஷால், நாசர், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மீதான வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்து தீர்ப்பு கூறாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தனர். அதில் 2019ல் நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லும். மறுதேர்தல் நடத்த தேவையில்லை. தேர்தலில் பதிவான ஓட்டுகளை 4 வாரங்களில் எண்ணி முடிவுகளை அறிவிக்கவும் தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.