'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் டிவியின் நம்பர்1 தொடரான பாரதி கண்ணம்மாவில் டுவிஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டாக பல புதிய திருப்பங்கள் நடைபெறவுள்ளது. விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பா சிறைக்கு செல்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வெண்பா இல்லாமல் கதை எப்படி நகரும் என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக பழைய வில்லனான மாயாண்டி கதாபாத்திரம் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் கதைக்களம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சிறைக்கு செல்லும் வெண்பா அங்கே இருக்கும் மாயாண்டியை சந்தித்து கண்ணம்மாவை பழிவாங்க கூட்டு சேர்கிறார். இதற்கிடையில் சிறையிலிருந்து வெளிவரும் மாயாண்டி வெண்பாவின் வேலைக்காரி சாந்தியை சந்தித்து கண்ணம்மாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார். இதனால் கதைக்களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், ஒருபுறம் பாரதி கண்ணம்மாவின் ஹீரோயின் ரோஷினி சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் முக்கிய நடிகையான வெண்பா கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் சீரியலை விட்டு விலக வேண்டிய கட்டாயத்தில் அவர் சிறைக்கு சென்றுவிட்டதாக காட்சியமைக்கப்படுள்ளது. நிலவரம் இப்படி இருக்க வில்லனாக என்ட்ரி கொடுக்கும் மாயாண்டி கதாபாத்திரம் பாரதி கண்ணம்மாவின் டிஆர்பிக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.