விமர்சனம்
அ நிறம் | அளவு
பொதுவாக இயக்குனர்கள் தங்கள் படத்தைப் பற்றி நம்பிக்கையுடன் கூறும் வார்த்தை "படம் பேசும்" என்பது. அதையே ஒரு படத்துக்கு தலைப்பாக்கி விட்டார்கள். "பை 2" என்ற படத்தை இயக்கியவர் ராகவா. இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயின் இருவர் மட்டுமே நடித்திருந்தனர். அந்தப் படம் தோல்வியடையவே ராகவாவுக்கு அதன் பிறகு படம் கிடைக்க வில்லை. இப்போது படம் பேசும் என்ற படத்தை இயக்கி வருகிறார். பி.வாசு மகன் சக்திதான் ஹீரோ, சங்கர் என்ற தெலுங்கு நடிகர் இன்னொரு ஹீரோ. பூர்ணா ஹீரோயின். தமிழ் தெலுங்கில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாம். ஷாயாஜி ஷிண்டே, நிஷா கோத்தாரி என தெலுங்கு, தமிழ் நட்சத்திரங்கள் கலந்து நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் இப்போது எதுவும் பேச மாட்டாராம். ஏன் என்று கேட்டால் பட தலைப்பு மாதிரியே படம் பேசுமாம்
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!