விமர்சனம்
அ நிறம் | அளவு
திருவண்ணாமலை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு கல்லூரி தொடர்புடைய பேராசிரியர்கள், மாணவிகள், இன்னும் சிலர் முகமூடி அணிந்த ஒரு நபரால் கொல்லப்படுகிறார்கள். அது தொடர்பான சிசிடிவி ஹார்டு டிஸ்க் பழுதாக , ஒரு தனியார் கடையில் அதை சரிபார்க்க கொடுக்கிறார்கள் போலீசார். அதை சரி செய்யும் ஸ்ரீதர் தான் அந்த கொலையாளி என போலீசுக்கு தெரிய வருகிறது. ஜவ்வாது மலைவாசியான அவர் கொலையாளியாக மாற காரணம் என்ன? மலையில் இருந்து தனியார் கல்லூரிக்கு படிக்க வரும் அவர் முறைப்பெண் ஸ்வேதாவுக்கு என்ன நடந்தது என்பது ஜெடூசி கதை. பெண்கள் தலையில் சொருகி இருக்கும் குண்டூசிக்கு ஜெடூசி என பெயர். அதை வைத்து கொலை செய்வதால் இந்த தலைப்பு.
அடுத்தடுத்து நடக்கும் மர்ம கொலைகள், கொலையாளிகள் பின்னணி, போலீஸ் விசாரணை என முதற்பாதி நகர்கிறது. தனியார் கல்லூரி அதிபர் ஏ.வெங்கடேசை நல்லவராக காண்பிக்கிறார் இயக்குனர். அப்புறம் டுவிஸ்ட். போலீசில் அப்பாவியாக இருக்கும் ஹீரோ ஸ்ரீதர் பிடிபட்டவுடன் கதை வேகம் எடுக்கிறது.
போலீஸ் விசாரணை, பிளாக் பாண்டி காமெடி, கொலைகள் என முதற்பாகம் கிரைம் பின்னணியில் நடக்கிறது, அடுத்த பாகம் மலை வாழ் மக்களின் வாழ்க்கை, அவர்களின் நிலை. கல்வி கற்க நகரத்துக்கு வரும் ஒரு மலை வாழ் பெண்ணுக்கு ஏற்படும் சோகம் என வேறு திசையில் நகர்கிறது.
நகரத்து அப்பாவி இளைஞன், வீரமான மலைவாசி என இரண்டு கெட் அப்பில் வருகிறார் ஹீரோ ஸ்ரீதர். அவர் நடிப்பு, தவிப்பு ஓகே. மலை வாழ் பெண்ணாக வரும் ஸ்வேதா மனதில் நிற்கிறார். கல்லூரி அதிபராக வரும் ஏ.வெங்கடேஷ்.அமைதியாக மிரட்டி இருக்கிறார். கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் பரவாயில்லை ரகம். பாடலில் புதுமை இல்லை
சின்ன பட்ஜெட் படம், புதுமுகங்கள் நடித்த படம் என்பதால் பல குறைகள். மலைவாழ் மக்களின் வலியை, அவர்களை டார்ச்சர் செய்யும் சிலரின் கொடூரத்தை சொன்னதும் ஓகே. ஆனால் படத்தில் கமர்சியல் விஷயங்கள் எதுவும் இல்லை. கிளைமாக்ஸ் கோர்ட் சீன், பெண் நீதிபதியின் தீர்ப்பு. அவரின் கொண்டை ஊசியை கொண்டு வில்லனுக்கு ஹீரோ கற்பிக்கும் பாடம் படத்தின் ஹைலைட். ஒரு அழுத்தமான சப்ஜெக்ட்டை அழுத்தம் இல்லாமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஜெடூசி - கொண்டை ஊசியால் நடக்கும் கொலைகள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…