விமர்சனம்
அ நிறம் | அளவு
கொடைக்கானலில் போட்டோசெஷன் எடுக்க வருகிறார்கள் திருமணம் ஆக உள்ள ஜோடிகளான அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி. ஒரு ரிசாட்டில் தங்குகிறார்கள். ஏற்கனவே அங்கே ஒரு இளம் பெண் தற்கொலை செய்து இருக்கிறார். இதற்கிடையில், தன்னுடன் வந்த எனாக்ஷி கங்குலியை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கிறார் அருண் கார்த்தி. அந்த வீட்டு வாட்ச்மேன், திருட வந்தவர்கள், பால்காரன் என பலரையும் விசாரிக்கிறார் போலீஸ் ஏட்டு கருப்பு நம்பியார். அருண் கார்த்திக்கு வேறு சில பிரச்னைகள். அந்த பெண்ணுக்கு என்னாச்சு? அவரை போலீஸ் கண்டுபிடித்தார்களா? அந்த மர்ம பங்களாவில் நடந்தது என்ன? என்பது பனி விழும் இரவு படக்கதை.
காணாமல் போன இளம் பெண்ணை தேடும் கதை என்ற ஒன்லைனில், திரில்லர் ஜானரில் இந்த படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் எஸ்ஆர்.ராஜேஷ். பெரும்பாலான படப்பிடிப்பு கொடைக்கானலில், அதுவும் பங்களாவை சுற்றியே நடக்கிறது.
காதலியுடன் போட்டோசெஷன், சில சந்தேகம், சில பிரச்னைகள் என ஹீரோ லைப் நகரும்போது, அவரை காணவில்லை என தெரிந்தவுடன் துடிக்கிறார். அதிலிருந்து படமும் விறுவிறுப்பாகிறது. கொஞ்சம் அப்பாவி காதலன், கொஞ்சம் சந்தேகபுத்தி என அந்த கேரக்டரில் ஓரளவு நன்றாக நடித்து இருக்கிறார் அருண் கார்த்தி. போலீசில் அவர் புலம்பும் இடங்கள், இன்னொரு கேரக்டராக மாறும் சீன்கள் சூப்பர்.
ஹீரோயினாக வரும் எனாக்ஷி கங்குலியின் நடிப்பு ஓகே. மேக்கப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்த வழக்கை விசாரிக்கும் ஏட்டு கேரக்டரில் கருப்பு நம்பியார் மனதில் நிற்கிறார். அவருக்கு வரும் சந்தேகங்கள், கிளைமாக்சில் அவர் படும்பாடு எல்லாம் படத்துக்கு பிளஸ்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சேரன்ராஜ் பல படங்களில் பார்த்த அந்த பாடிலாங்குவேஜில் வருகிறார். உறியடி சுருளி, வாட்ச்மேன் ஆக வரும் சரவண சக்திக்கும் நல்ல கேரக்டர்கள். கவுரவ வேடத்தில் டாக்டராக வந்து, கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறார் கஜராஜ். ஆரம்பத்தில் பேய் படம் மாதிரி கதை நகர்கிறது. அடுத்து காணாமல் போன பெண் கதையாக மாறி, திரில்லர் பாணிக்கு போய், கடைசியில் உளவியல் சப்ஜெக்ட்டில் முடிகிறது. திரைக்கதை சுமார் என்றாலும், விசாரணை காட்சிகள், போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஓகே. பல காட்சிகளில் அழுத்தம் குறைவு, திரில்லர் படத்துக்கான எபக்ட் கம்மி.
கொடைக்கானல் அழகை, இரவு நேரத்தை, சில திரில்லர் காட்சிகளை ஜெயகுமார் தங்கவேல் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். சதாமுருகனின் வின் இசை ஓகே.
முதற்பாதி நகரவே இல்லை. பல இடங்களில் இழுக்கிறது. அடுத்த பாதிதான் பரபரப்பு. முதற்பாதியில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான கதை, இன்னும் சில பரபரப்பு, அதிரடி சீன் இருந்து இருந்தால் இன்னும் படம் பேசப்பட்டு இருக்கும். ஹீரோ யார்? அவனுக்கு என்ன பிரச்னை என்ற சின்ன விஷயத்தை வைத்துக் கொண்டு படத்தை இழுத்து இருப்பது மைனஸ். பேய் படம் மாதிரியும் இல்லை, திரில்லர் பாதிப்பும் குறைவு. உளவியல் ரீதியாக சொல்லும் சில விஷயங்கள் மட்டுமே படத்தின் பிளஸ். அதற்காக 2 மணி நேர படத்தை பொறுமையாக பார்ப்பது பெரிய சவால்.
பனி விழும் இரவு - காணாமல் போன காதலியை தேடும் காதலன் கதை

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…