விமர்சனம்
மொத்தத்தில், வாலு, எஸ்டிஆருக்கு மட்டுமல்ல எல்லாதரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வலு! - எஸ்டிஆர் மெய்யாலுமே தூக்கியிருக்கிறார் எக்கச்சக்க பளு!! - வாலு - வசூலு!!!
கல்கி திரை விமர்சனம்
மூன்று வருடப் போராட்டத்துக்குப் பிறகு வந்திருக்கும் வாலு, சிம்புவுக்கு கைகொடுத்திருக்கிறது. காரணம், ஆபாசம் அரங்கேற்றாத இன்றைய யதார்த்தமான காதல் கதை. குறிப்பாக சிம்புவின் கேரக்டரை போகஸ் செய்து எடுக்கப்பட்டிருப்பது.
ரயில் ஓட்டுநரின் மகன் சிம்பு, தினமும் அப்பா கொடுக்கும் நூறு ரூபாயை செலவுக்கு வைத்துக் கொண்டு சந்தானத்துடன் ஊர் சுற்றும் விட்டேத்தி. தன் அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்கப் போகும்போது ஹன்சிகாவைச் சந்திக்கிறார். அவரின் அழகில் மயங்கி காதலிக்கிறார். அவரிடம் காதலைச் சொல்கிறார். ஹன்சிகாவுக்கு ஏற்கெனவே முறை பையனுடன் திருமணம் பிக்ஸ் ஆனதைச் சொல்ல, மனந்தளராத சிம்பு நட்புடன் பழகுவதாகச் சொல்லி காதலை டெவலப் செய்கிறார். இன்னொரு பக்கம் ஹன்சிகா முறை பையன் அடியாள் பலத்தோடு ரஃப் அண்ட் டப் வில்லன். இதற்கிடையில் ஹன்சிகா - சிம்பு காதல் எப்படி கைகூடியது என்பதே மீதிக்கதை.
ஒரு இளைஞன் எந்நேரமும் காதலே கதியென்று இருப்பதும், புகைப்பதும் தண்ணி அடிக்கலாமா என்று கூறுவதையும் தவிர்த்திருக்கலாம். சிம்புவுக்கு நடிக்க வாய்ப்பிருக்கிறது. சரியாக பயன்படுத்தியிருக்கிறார். ஹன்சிகா அழகுப் பதுமை, வந்துபோனாலும் நெஞ்சைத் தொடும் கதாபாத்திரம், சந்தானம் தான் சிரிப்புக்கு ஒரே ஸ்கோப். முடிந்தளவு காட்சியை நகர்த்தப் பயன்பட்டிருக்கிறார். கதையின் போக்கு எப்படிப்போகும் என்று தெரியாமல் மிக நேர்த்தியாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் விஜய்சந்தர்.
வாலு - பாஸ்!






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!