காஜல் அகர்வாலுக்கு ஏமாற்றத்தை தந்த தி இந்தியா ஸ்டோரி
ஜூலை 27, 2026
ஹிந்தியில் காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி இந்தியா ஸ்டோரி படம் பாக்ஸ் ஆபீஸில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த சமூக விழிப்புணர்வு படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க காஜல் பல தளங்களில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்த போதிலும், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் திரையரங்குகளுக்கு வரவில்லை. காஜல் செய்த தீவிரமான புரொமோஷன் பணிகளுடன் ஒப்பிடும்போது, இப்படம் முதல் நாளில் வெறும் ரூ. 18 லட்சம் மட்டுமே வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஜலின் சமீபத்திய திரை வாழ்க்கையில் இது ஒரு மிகப்பெரிய பின்னடைவு எனத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலத்த ஏமாற்றமடைந்துள்ளார் காஜல் அகர்வால். அடுத்து அவர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நாயகியாக இணைந்துள்ளார் . இந்த படம் தனக்கு திருப்புமுனை தரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!