விமர்சனம்
அ நிறம் | அளவு
இந்தியா மற்றும் அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றிய டாக்டர் எஸ்.ராஜா மருத்துவத்துறை பின்னணியில் இயக்கியுள்ள சமூக விழிப்புணர்வு படம் செய் செய்யாதே. அவரே இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார். பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா முதல்வராக முக்கியமான காட்சிகளில் நடித்துள்ளது படத்தின் ஹைலைட்.
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் எளிய மக்களுக்கு சேவை செய்யும் நேர்மையான டீன் ஆக பணியாற்றுகிறார் டாக்டர் எஸ்.ராஜா. அவர் மகன் குருவிஜய் நேர் எதிர். டாக்டருக்கு படித்துவிட்டு லாபம் சம்பாதிப்பதை நோக்கமாக வைத்துள்ள, ஒரு தொழிலதிபரின் தனியார் மருத்துவமனையை நிர்வகித்து நடத்துகிறார். அப்பா மக்களுக்கு நல்லது செய்து நோயாளிகளின் உயிரை காப்பாற்ற, மகனோ சில தவறான வேலைகள் செய்கிறார். சுயநலத்துக்காக மார்க்கெட்டில் ஆபத்தான பொருட்களை விற்பனை செய்து சம்பாதிக்கிறார். ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மகள், போலீஸ் அதிகாரியின் மகள் திடீரென ஹார்ட் அட்டாக்கில் இறக்க, அது குறித்து டாக்டர் எஸ்.ராஜா மருத்துவ ரீதியாக ஆய்வு செய்கிறார். அப்போது சில உண்மைகள் அவருக்கு தெரிய வருகிறது. அதற்குபின் பின்னணியில் இருந்த மகன் போலீசில் சிக்கினாரா? மெடிக்கல் மாபியாவை அரசு துணையுடன் டாக்டர் எப்படி ஒழிக்கிறார் என்பது செய் செய்யாதே படக்கதை.
ஒரு நல்ல டாக்டர், ஒரு கெட்ட டாக்டர் கதையை, அப்பா, மகன் பின்னணியில் இயக்கியிருக்கிறார் டாக்டர்.எஸ்.ராஜா. நிஜத்தில் அவர் டாக்டர் என்பதால் ஒரு டாக்டர் எப்படி இருக்க வேண்டும். எதை செய்ய வேண்டும் என பல சீன்களில் எளிமையாக விளக்கியிருக்கிறார். பணத்துக்காக ஆபரேஷன் செய்ய நோயாளிகளை கட்டாயப்படுத்தக்கூடாது. ஆஸ்பத்திரி வருமானத்துக்காக சாதாரண விஷயத்தை ஊதி பெரிதாக்கி, நோயாளிகளை சிரமப்படுத்தக்கூடாது. குறைந்த விலையுள்ள தரமான மருந்துகளை பரிந்துரைக்கணும். அரசு மருத்துவமனைகளில் நல்ல வசதி இருக்கிறது. திறமையான டாக்டர்கள் இருக்கிறார்கள். அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருவில் நடித்து பல இடங்களில் அட, இவரல்லவா டாக்டர் என அப்ளாஸ் வாங்குகிறார். புதுமுகம் என்றாலும், அவரின் நடிப்பில் ஒருவித நேர்த்தி, அமைதி இருக்கிறது. எந்த இடத்திலும் தானே இயக்குனர் என்பதால் பில்டப் இல்லை. குறிப்பாக, நோயாளிகளுக்கும் அவருக்குமான சீன்கள், ஆபத்தான ஒரு விஷயத்தை அவர் கண்டுபிடித்து, அடுத்து எடுக்கும் பரபர நடவடிக்கைகள் படத்தின் உயிர். படம் முழுக்க மருத்துவர ரீதியாக பல விஷயங்களை எளிமையாக சொல்லியிருக்கிறார்.
அவர் மகனாக பணத்தாசை பிடித்த டாக்டராக, கிட்டத்தட்ட வில்லன் மாதிரி நடித்து இருக்கிறார் குரு விஜய். தனியார் மருத்துவமனையில் ஹார்ட் ஆபரேஷனை அதிரிக்க, அவர் சொல்லும் ஐடியாக்கள், நோயாளிகளிடம் பணம் பறிக்க அவர் போடும் திட்டங்கள், நோயை உருவாக்க அவர் செய்யும் விஷங்கள் பதை பதைப்பை ஏற்படுத்துகிறது. இப்படி எல்லாம் நம் குடும்பமும், நண்பர்களும் ஏமாந்து இருப்பார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மதுரை தொழிலதிபராக நடித்தவர், தனியார் மருத்துவமனை நிர்வாகி, சுகாதாரதுறை மந்திரி, போலீஸ் ஆபிசர்கள், ஐஏஎஸ் அதிகாரி என எல்லாரும் மிகைப்படுத்தல் இல்லாத இயல்பான நடிப்பை தந்து இருக்கிறார்கள். டாக்டர் ராஜா மனைவியாக வரும் தர்ஷினி ரெட்டி, அவர் மகளாக வரும் திவ்யா ஆகியோர் சில சீன்களில் தேர்ந்த நடிப்பை தந்து இருக்கிறார்கள்.
ஒன்றிரண்டு சீன்களில் முதல்வராக வருகிறார் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா. படத்தின் உயிரோட்டமான காட்சிகள் அவை . அவர் பேசுகிற வசனங்கள், துாய்மை பணியாளர்கள், நர்ஸ் மீது அவர் காட்டுகிற அக்கறை, போதையில்லா மாநிலத்தை உருவாக்க ஆட்சி போனாலும் பரவாயில்லை என பேசுவது, கடைசியில் வில்லன் டீமுக்கு எதிராக அவர் எடுக்கிற நடவடிக்கைகள் படத்தை வேகப்படுத்திருக்கிறார். ஒரு சீனியில் முதல்வர் மீட்டிங்கில் விவேகானந்தர் கட்அவுட்டும் பிரேமில் இருப்பது நெகிழ்ச்சி.
மருத்துவம், ஆஸ்பத்திரி, அது தொடர்பான காட்சிகள் ஓகே. ஹீரோ குருவிஜய், தபிதா காதல் காட்சிகள் செட்டாகவில்லை. மதுரையில் கதை நடக்கிறது. மதுரையின் அழகை, அங்குள்ள மக்களை இன்னும் உணர்வுபூர்மாக காண்பித்து இருக்கலாம். சில இடங்களில் கதை மெதுவாக நகர்கிறது. கிளைமாக்சில் தவறு செய்யும் மகனை அப்பா பாசத்தால் விட்டுக் கொடுப்பது சரியா? அவருக்கு கடும் தண்டனை என்றால் படம் இன்னும் வலுவாகி இருக்கும். அதேசமயம் கிளைமாக்ஸ் டுவிட்ஸ்ட் ரசிக்க வைக்கிறது. விசாரணை காட்சிகளில் இன்னும் வேகம் இருந்து இருக்கலாம். சில இடங்களில் சீரியல் டோன்.
சில குறைகள் இருந்தாலும் மருத்துவதுறையின் மறுபக்கத்தை, தனியார் மருத்துவமனைகளின் இன்னொரு முகத்தை சமீபத்தில் எந்த படமும் இவ்வளவு அழுத்தமாக, இவ்வளவு விவரங்களுடன் காண்பித்தது இல்லை. நோயை பயன்படுத்தி சிலர் போடும் கணக்குகள் நெஞ்சை பதற வைக்கின்றன. கொரோனா மாதிரியான காலக்கட்டத்தில் மருத்துவ துறையில் நடந்த முறைகேடுகள், அவலத்தை சில சீன்கள் நச்சென சொல்லியிருக்கிறது. குறிப்பாக, 8 கோடி மதிப்புள்ள டெண்டர், 18 கோடியாக மாறுவது செம. தவறான மருந்து, ஊசி, டெஸ்ட் குறித்து விரிவாக பேசியிருக்கிறார்கள். சில இடங்களில் ஆவணப்படம் மாதிரியாக சென்றாலும், சில இடங்களில் பிரசார வாடை இருந்தாலும், ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து மருத்துவ ரீதியாக பல விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டிய படம் இது. அரசு மருத்துமனைகள், அரசு டாக்டர்கள், ஊழியர்களை பாசிட்டிவ் ஆக காண்பித்தது கூடுதல் சிறப்பு.
செய் செய்யாதே - ஆஸ்பத்திரியில் நமக்கும் இப்படியெல்லாம் நடந்து இருக்கிறதே என பலர் பதறுவது நிச்சயம்

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…