விமர்சனம்
ஹீரோயினாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருப்பதால் என்னவோ நடிப்பிலும் சிக்கனம் காட்டியிருக்கிறார் அனுஷ்கா. பிளாஷ்பேக்கில் வரும் அனுஷ்காவின் நடிப்பில் பெரிய குறையொன்றுமில்லை, அழகாக தோன்றுகிறார், ஆனால் பேய் கதாபாத்திரத்தில் வரும் அவரது நடிப்பு சுத்தமாக எடுபடவில்லை.
கொஞ்சம் காட்சிகளிலே வந்தாலும் தில்ஜித் மனதில் ஒட்டிக் கொள்கிறார். இவரைப்போலவே சுராஜ் சர்மாவும் நடிப்பில் மட்டுமல்லாது காமெடியிலும் ரசிகர்களை மகிழ்விக்கிறார். சுராஜின் காதலியாக வரும் அறிமுக நடிகை மெஹ்ராவின் நடிப்பு ஓகே., என்ற அளவில் தான் உள்ளது.
ராஜஸ்தானின் எழில் மிகுந்த இடங்களை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். சாஸ்வத் சஜ்தேவ், ஜஸ்லீன் ராயல் என இரண்டு பேர் இசையமைத்திருந்தாலும் பாடல்கள் சுக ராகங்களாக இல்லை.
அன்சாய் லால் என்ற அறிமுக இயக்குநர் தான் பில்வுரி படத்தை இயக்கியுள்ளார். அறிமுக படம் என்பதாலோ என்னவோ, ஒரே நேரத்தில் இரண்டு காலக்கட்ட கதையை கொடுக்க நினைத்து அதில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். படத்தின் முதல்பாதியை சிறப்பாக இயக்கியுள்ளார், ஆனால் இரண்டாம் பாதியில் கதையின் ஓட்டத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல தவறிவிட்டார். இனி வரும் படங்களில் இதை சரி செய்வார் என நம்பலாம். அந்த நம்பிக்கையுடனேயே ‛பில்வுரி படத்தை ஒருமுறை வேண்டுமானால் பார்க்கலாம்.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!