விமர்சனம்
அ நிறம் | அளவு
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ஒன்றின் பெயர் நெருக்கம். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் வேண்டும் தான். அதுவே அதிகமானால் ஆபத்தில்தான் முடியும் என்பதை சொல்கிற படம். மிகநெருக்கமாக இருப்பர்களிடையே வரும் பிரச்னைகளை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அஸ்வின் கார்த்திக், வித்ரஷா, சனா என்ற புதுமுகங்கள் நடிக்க சசி இயக்கி இருக்கிறார். வி.தஷி இசை அமைத்துள்ளார், உத்பல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் படம். குற்ற சம்பவங்கள் எங்கும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானலும் நடக்கலாம். அதை எதிர்கொள்ள வேண்டிய பக்குவத்தை ஒவ்வொரும் பெற்றிருக்க வேண்டும் என்கிற மேசேஜையும் சொல்கிற படம். படப்பிடிப்பு முடிந்து விட்டது. விரைவில் வெளியிட இருக்கிறோம் என்கிறார் இயக்குனர் சசி.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!