விமர்சனம்
அ நிறம் | அளவு
பள்ளி வேன் டிரைவரான குஞ்சாக்கோ போபன், சக ஆசிரியை அனு சித்தாராவையும் அவரது மகளையும் நேசித்து, விரைவில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஒரு சிறுமியின் வழக்கில் அவர் சந்தேக நபராகச் சேர்க்கப்படுகிறார். முன்னாள் தடயவியல் நிபுணர் என்பதால், அதே வழக்கின் விசாரணைக் குழுவிலும் அவர் இணைக்கப்படுகிறார். சக போலீசாரின் அவநம்பிக்கை மற்றும் புதிய இன்ஸ்பெக்டர் ஹக்கீம் ஷாஜகானின் நெருக்கடிகளுக்கு இடையே, தனது நண்பன் வினய் போர்ட் உதவியுடன் குஞ்சாக்கோ போபன் களமிறங்குகிறார். தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்க அவர் நடத்தும் விசாரணையில் மாயமான சிறுமி குறித்து வெளிவரும் அதிர்ச்சிகரமான உண்மைகளும், யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸுமே மீதிக்கதை.
ஹீரோயிசம் இல்லாத, அதேசமயம் தனிமனித கோபம் கொண்ட ஒரு இயல்பான மனிதனின் கதாபாத்திரம் குஞ்சாகோ போபனுக்கு. அதில் மிகக் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். காலம் கழித்து தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேடும் போது தேவையில்லாமல் ஒரு பழைய வழக்கு, அதைத் தடுக்க முற்படும் போதும் வலுக்கட்டாயமாக அதில் தான் சிக்க வைக்கப்படுகிறோம் என்கிற கோபத்திலும், அந்த வழக்கை விசாரிக்கக் குஞ்சாக்கோ போபன் காட்டும் தீவிரம், அந்த இடத்தில் நாமே குஞ்சாக்கோவாக மாறிவிடுகிறோம் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.. தன்னைத் தடுக்க நினைப்பவர்களிடமும், ஒரு கட்டத்தில் தான் நம்பியவர்களே தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கும் இடத்திலும் சண்டமாருதமாகச் சீறி அவர்களைத் துவம்சம் செய்யும் காட்சியில் இருக்கை நுனியில் அமர வைத்து நகம் கடிக்க வைத்து விடுகிறார் குஞ்சாக்கோ. உக்கிரமான சண்டைக் காட்சிகளில் அவ்வளவு எதார்த்தம்.
நாயகி அனு சித்தாரா, கணவனிடம் இருந்து எதற்காக விவாகரத்து பெற்றுப் பிரிகிறார் என்பது தெரியவில்லை. குஞ்சாக்கோ போபனை விரும்புகிறார், திருமணம் செய்யத் தயாராகிறார் என்பது வரையே சொல்லப்பட்டாலும் அந்த அளவில் அவரது நடிப்பு ரொம்பவே இயல்பாக இருக்கிறது. அவரது மகளாக வரும் குழந்தை நட்சத்திரமும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சமீபகாலமாக அதிரடி கதாபாத்திரங்களில் பார்த்த சுராஜ் வெஞ்சாரமூடு, இதில் மகளைப் பறிகொடுத்த ஒரு சோகமான தந்தை கதாபாத்திரத்தில் அவ்வப்போது மட்டுமே வந்து செல்கிறார் என்பது ஏமாற்றமே என்றாலும், அவரது நடிப்பில் துளியும் குறைவில்லை. நாயகனுக்கு உதவும் நண்பனாகப் படம் முழுவதும் பயணிக்கும் வினய் போர்ட்டுக்கும் (இவர் பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தில் மமிதாவின் மாமாவாக நடித்தவர்) மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது..
வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ஹக்கீம் ஷாஜகான், (ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யாவின் தம்பியாக நடித்தவர்) எப்போதும் சூயிங்கம் மென்று கொண்டே வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.. அடையாள அணிவகுப்பில் ஒரு சிறுமி குஞ்சாகோ போபனைக் குற்றவாளியாகக் கைநீட்டி காட்டுகிறாரே என முக்கால்வாசி படத்திற்கு நமக்கு சந்தேகம் இருந்தாலும், இந்த வழக்கில் உருவச் சாயலால் குஞ்சாகோ சிக்கிக்கொள்வதும், வில்லன் தப்பிப்பதும் எதிர்பாராத திருப்பம். பாரன்சிக் அதிகாரியாக வரும் சுகாசினி மணிரத்னம் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் திகைக்க வைக்கிறார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் ஜெகதீஷ், மூடிய குளத்தைத் தோண்டும்போது தடுக்கும் எதிர்ப்பாளர்களை ஒரு வெற்றுக் காகிதம் கொண்டு சமாளிக்கும் காட்சி கைதட்டல்களை அள்ளுகிறது.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை சண்டைக் காட்சிகளிலும் சேசிங் காட்சிகளிலும் பரபரக்க வைத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ் ராஜ் படம், முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடக்கும் காட்சிகளை ரசித்துப் படமாக்கியிருக்கிறார். குறிப்பாக, குறுகிய இடங்களில் நடக்கும் சண்டைக் காட்சிகளை அவர் படமாக்கிய விதம் அருமை.
படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரைப் பார்த்து விட்டு இது ஒரு தந்தைக்கு மகளுக்குமான அன்பைச் சொல்லும் படமாக இருக்குமோ என்கிற யோசனையுடன் சென்றால், அதிரடி ஆக்ஷன் படமாகக் கொடுத்து நமக்கு ஆச்சரியம் அளிக்கிறார் அறிமுக இயக்குனர் விஷ்ணு ரவிக்குமார். கடைசி வரை ஒரு குற்றம் எதனால் நடந்தது, யார் நடத்தியது என்பதை யூகிக்க விடாமல் திரைக்கதையை நகர்த்திச் சென்றது அவரது சாமர்த்தியம்.. தொடரும் படத்தில் மோகன்லாலுக்கு அமைந்தது போல, இதில் குஞ்சாக்கோ போபனுக்கும் இரண்டு சண்டைக் காட்சிகள் அமைந்திருப்பது படத்திற்குப் பிளஸ் பாயிண்ட். சண்டைக் காட்சிகளில் ரசிகர்களின் விசிலும் ஆரவாரமும் தெறிக்க விடுகிறது.. லாஜிக் பார்த்து ஏதாவது குறை கண்டுபிடிக்கலாம் என நினைத்தால் அதற்கு இடம் கொடுக்காமல் காட்சிகளைத் திறம்படக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் விஷ்ணு ரவிக்குமார்.
ஹெய்ல் மேரி - தொட்டவனை விடமாட்டேன்

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…