விமர்சனம்
----------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
டிரைவிங் பள்ளியில் பணிபுரியும் விக்ரம் எதையும் 10 எண்றத்துக்குள்ள செய்து முடித்துவிடுவார். அது காதலாக இருந்தாலும் சரி, கார் கடத்தலாக இருந்தாலும் சரி, காதலியைக் கடத்துவதாக இருந்தாலும்சரி. ஆனால் அதையே படம் முழுக்க ஜவ்வாக இழுத்தால் எப்படி?
உத்ரகண்டில் ஒரு கொலைகாரி சமந்தாவுக்குப் பதிலாக சென்னை சமந்தாவை மாட்டிவிடத்தான் அவரை கடத்துகிறார்கள் என்று தெரியும் வரை தலைவலியே வந்துவிடுகிறது.
விக்ரம் சுறுசுறுப்பு. அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அசத்தல், ஆனால் சதா கார் ஓட்டிக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருப்பதால் அவரது மொத்த நடிப்பும் பயனில்லாமல் போகிறது.
சமந்தா அழகு கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். ஆனால் ஜெனிலியா டைப் கொஞ்சல் பேச்சு சகிக்க முடியவில்லை. வில்லி வேடம் வீண். பசுபதி என்றாலே காமெடி வில்லன் என்று முத்திரை குத்திவிட்டார்கள். ராமதாஸ், ராகுல்தேவ், அபிமன்யுசிங் என்று நிறையபேர் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள். ஆனால் வில்லத்தனம்தான் நஹி.
இமான் இசை சுமார் ரகம். ஆனாலும் இந்த மயக்கம் மட்டும் ரசிக்க வைக்கிறது. படத்தில் எடிட்டர் நிறையவே கத்திரி போட்டிருக்கலாம். கார் சேஸிங் ஓகே. சண்டைக் காட்சிகளில் கிராஃபிக்ஸ் காட்டிக் கொடுக்கிறது. படத்தின் ஒரே ப்ளஸ் கேமராதான். வட இந்தியாவையும் சென்னையையும் அழகாகக் காட்டியிருக்கிறார்.
கோலிசோடாவில் மிரட்டிய இயக்குநர் விஜய்மில்டன் இதில் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். கிளைமாக்ஸ் வரை கதை என்னங்க? என்று கேட்கவைத்து பொறுமையைச் சோதிப்பதால் படம் தள்ளாடுகிறது.
பத்து எண்றத்துக்குள்ள - போதும்டா சாமி
குமுதம் ரேட்டிங் - சுமார்

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!