பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

தற்போது நானி நடித்து வரும் படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். நானி ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
நானி நடித்த 'ஹாய் நான்னா' படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் புரமோசன் பணிகள், வெளியீட்டு பணிகள் காரணமாக சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஹாய் நான்னா படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுவிட்ட நிலையில் நானி மீண்டும் சூர்யாவின் சனிக்கிழமை படத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இந்த படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
தெலுங்கில் 'சரிபோத்தா சனிவாரம்' என்ற டைட்டிலுடன் தயாராகும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு செய்கிறார். அக்டோபர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பில் இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது.