''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான 2018 என்ற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது மலையாளத்தில் நடிகர் திலகம் என்ற ஒரு படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது அவரது காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இரண்டு வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்களாம். இதன் காரணமாக நடிகர் திலகம் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.