
17 வயதில் திருமணம் ஒரே வருடத்தில் விவாகரத்து : எதிர்நீச்சல் போட்டு சாதித்த ரேகா நாயர்
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது கடந்தகால சோக வாழ்க்கை குறித்து பேசியுள்ள ரேகா, ‛‛எனக்கு 17 வயதிலேயே திருமணமாகிவிட்டது. 18 வயதில் எனக்கு மகள் பிறந்தாள். அப்போதே என் கணவர் என்னை விட்டு பிரிந்துவிட்டார். இப்போது எனக்கு 37 வயதாகிறது. 2 வருடங்களுக்கு முன்பு தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். இந்த 20 வருடத்தில் பல பெரிய மாற்றங்களை என்னிடம் பார்க்கிறேன். வீடு வாங்கிவிட்டேன், 2 கார்கள் வைத்திருக்கிறேன். முடியாது என்பது இந்த உலகத்தில் இல்லை"" என தன் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். இவ்வளவு கஷ்டத்திலும் துணிச்சலுடன் எதிர்நீச்சல் போட்டு சாதித்த ரேகா நாயருக்கு பலரும் தற்போது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!