
சரிகமப அசானிக்கு ஊரே சேர்ந்து செய்த உதவி
இந்நிலையில், ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசைப்பட்ட அவருக்கு மெகா ஆடிஷனில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. காரணம் தமிழ்நாட்டிற்கு அவர் வருவதென்றால் 1.5லட்சம் செலவு செய்ய வேண்டும். ஆனால், அசானியின் குடும்பத்தினரிடம் அவ்வளவு தொகை கிடையாது. இதனையறிந்த ஊர்மக்கள் அனைவரும் சிறுமி அசானிக்காக தங்கள் சேமிப்பு பணத்தை கொடுத்து அசானியையும் அவரது தந்தையும் டிக்கெட் போட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுமி அசானியின் பாடல் பாடும் திறமையை ஏற்கனவே அறிந்திருந்த நடுவர்களும், மெகா ஆடிஷனில் கலந்து கொள்ளாவிட்டாலும் அவருக்காக சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளனர். அந்த மேடையில் "ராசாவே உன்னை நம்பி" பாடலை அழகாக பாடிய அசானிக்கு தற்போது உலகெங்கிலும் பலரும் ரசிகர்களாகிவிட்டனர். சிறுமி அசானிக்காக பெரும் உதவியை செய்த ஊர்க்காரர்களின் நல்ல உள்ளங்களுக்காவது அசானி தொடர்ந்து ஜெயிக்க வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!