
பாம்புகளுடன் பயமின்றி விளையாடும் வீஜே பார்வதி
மார் 16, 2023
ஊடகங்களில் பிரபலமான வீஜே பார்வதிக்கு இளைஞர்கள் ரசிகர்கள் அதிகம். ராவான ரவுடி பேபியாக எந்தவொரு விஷயத்திலும் ஓப்பனாக தைரியமாக பேசுவதால் பலருக்கும் இவர் பேவரைட்டாக இருக்கிறார். அடிக்கடி எங்காவது டூர் சென்று அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்களை வீடியோவாகவும், சோஷியல் மீடியா போஸ்ட்டாகவும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் எக்ஸோடிக் பெட்ஸ் என அழைக்கப்படும் மிக அரிதான செல்லபிராணிகள் விற்கும் பண்ணைக்கு வீஜே பாரு அண்மையில் விசிட் அடித்துள்ளார். அங்கே, செல்லபிராணிகளாக வளர்க்கப்படும் அனகோண்டா பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டும் கையில் பிடித்தவாறும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். சில மிருகங்களை பெண்கள் பார்த்தாலே பயந்து ஓடுவர். ஆனால் பார்வதியோ, அந்த செல்லபிராணிகளுடன் பாசமாக கொஞ்சி விளையாடுகிறார். பாம்புகளுடனும் ஓணான்களுடனும் பயமின்றி விளையாடும் இவரின் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!