ஐடி துறையில் வேலை பார்க்கும் சீரியல் நடிகை வினுஷா தேவி
மார் 04, 2022
Advertisement
விஜய் டிவியில் நம்பர் ஒன் தொடரான "பாரதி கண்ணம்மா" தொடரில் தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரா கண்ணம்மா? என சிலர் கிண்டல் செய்ததை தன் நடிப்பில் வென்று ரசிகர் மனதில் இடம்பிடித்து விட்டார். சீரியலில் நடிப்பதற்கு முன் வினுஷா தேவி ஒரு போட்டோஷூட் மாடல் என்று மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால், அவரது உண்மையான புரொபஷனே வேறு. அதை பற்றிய தகவல் தற்போது தான் வெளிவந்துள்ளது.
வினுஷா தேவி ஒரு ஐடி புரொபஷனல். பகல் நேரத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் வினுஷா இரவு நேரத்தில் ஐடி கம்பெனியில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். அவர் மட்டுமல்ல அதே தொடரில் ஹீரோவாக நடித்து வரும் அருண் குமாரும் ஐடி துறை ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!