
ப்ரியங்கா மோகனுக்கே டப் கொடுக்கும் ஸ்ரீத்து
ஏப் 12, 2022
Advertisement
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீத்து கிருஷ்ணன். விஜய் டிவியின் 7 சி தொடரில் நடித்திருந்தார். தற்போது, சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ரீத்து கிருஷ்ணன் அழகிய பதுமையாக வலம் வந்து இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக அவர், ப்ரியங்கா மோகன் போலவே அழகான பராக் உடை அணிந்து டாக்டர் படத்தின் "செல்லம்மா" பாடலில் வரும் "மெலுகு டோலு நீ" வரிகளுக்கு அவரை போலவே டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீத்து பார்ப்பதற்கு செம க்யூட்டாக ப்ரியங்கா மோகனுக்கு டப் கொடுக்கும் வகையில் இருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!