
பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பிறகு வனிதாவை சந்தித்த சினேகன்
மார் 15, 2022
Advertisement
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் சினேகன் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளார். முதல் சீசனில் மருத்துவம் முத்தம் கொடுத்து பிரபலமான சினேகன் அந்த சீசனில் ரன்னர் பட்டத்தை வென்றார். புதிதாக திருமணமானதால் பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சீசனிலும் டப்பான போட்டியாளராக விளையாடி வந்தார். இந்நிலையில் ஞாயிறு அன்று நடந்த எவிக்ஷனில் சினேகன் வெளியேறிவிட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சினேகன் வந்ததும், வராததுமாய் தனது ஹவுஸ்மேட்டுகளை சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வனிதா, சினேகன், தாடி பாலாஜி மற்றும் சினேகனின் மனைவி கன்னிகா ரவி ஆகியோர் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!