
குட் பை சொல்ல கஷ்டமாயிருக்கு : தர்ஷனா உருக்கம்
மே 02, 2023
Advertisement
"சித்தி 2", "தமிழும் சரஸ்வதியும்" ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷனா. அதிலும், தமிழும் சரஸ்வதியும் தொடரில் ஹீரோயின் நக்ஷத்திராவை காட்டிலும் தர்ஷனாவுக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர். ஆனால், தர்ஷனா தமிழும் சரஸ்வதியும் தொடரைவிட்டு விலகுவதாக திடீரென செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ரசிகர்கள் குழப்பமடைந்திருந்த நிலையில், தர்ஷனாவை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பதிவில், தன் மீது அன்பை கொட்டும் ரசிகர்கள், வசுந்தராவாக பயணித்த தனது அனுபவம், தமிழும் சரஸ்வதியும் சீரியல் குழுவினர், நண்பர்கள் என அனைத்தையும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு "குட் பை சொல்ல கஷ்டமாயிருக்கு" என கூறி விடைபெற்றுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் தர்ஷனாவை சீரியலை விட்டு விலக வேண்டாம் என அன்பு தொல்லை கொடுத்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!