
விவாகரத்து பெற்றதை போட்டோசூட் நடத்தி கொண்டாடிய நடிகை ஷாலினி
மேலும் அவர் கூறுகையில், ‛‛குரல் அற்றவர்களாக தங்களை உணர்பவர்களுக்கு விவாகரத்து பெற்ற பெண்ணின் செய்தி இது. மோசமான திருமணத்தை விட்டு விடுவது பரவாயில்லை. காரணம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர்கள். உங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் . உங்களது வாழ்க்கையை கட்டுப்படுத்தி உங்களுக்காகவும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் தேவையான மாற்றங்களை செய்வதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். விவாகரத்து ஒன்றும் தோல்வி அல்ல. உங்களுக்கு வாழ்க்கையில் நேர்மையான மாற்றங்களை உருவாக்க வழிவகுக்கும் திருப்பு முனை. இந்த திருமணத்தை விட்டு வெளியேறுவதற்கு பெரிய அளவில் தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். என்னைப் போன்ற துணிச்சலான பெண்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்"" என்று பதிவிட்டு இருக்கிறார் சீரியல் நடிகை ஷாலினி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!