
சுனிதா குடும்பத்துடன் சந்தோஷ் பிரதாப்! ஒருவேளை அப்படி இருக்குமோ?
இருவரும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களும் வெளியிட்டு வந்தனர். திடீரென ஒருநாள் சுனிதாவின் பின்னால் ரொமாண்டிக்காக சுற்றுவது போல் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்த சந்தோஷ் "சர்ப்ரைஸ்... காத்திருங்கள் புதிய ப்ராஜெக்டின் அப்டேட்டிற்காக" என்று பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் சுனிதாவும் சந்தோஷூம் காதலிக்கிறார்கள் என்றே நினைத்தனர். இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்றுள்ள சுனிதா அங்கே தன் குடும்பத்தாருடன் கோயிலுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், சந்தோஷ் பிரதாப்பும் உடன் நிற்க ரசிகர்கள் பலரும் ஜோடி பொருத்தம் சூப்பர் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!