
பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய முல்லை யார் தெரியுமா?
இந்நிலையில், காவ்யா கடந்த மாதத்துடன் சீரியலை விட்டு விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அதை அதிகாரப்பூர்வமாக காவ்யாவும் தனது தெரிவித்துள்ளார். அதேசமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் முல்லை கேரக்டரில் யார் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்தது.
தற்போது முல்லை கதாபாத்திரத்தில் "சிப்பிக்குள் முத்து" தொடரின் நாயகி லாவாண்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "சிப்பிக்குள் முத்து" ஒளிபரப்பான சில மாதங்களுக்குள்ளாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு அண்மையில் முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் ரசிகர்கள் மனதில் மிகக்குறுகிய காலத்திலேயே இடம்பிடித்த லாவண்யா முல்லை கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் தான் என சின்னத்திரை ரசிகர்கள் பேசி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!