
2 முறை ஏமாற்றத்துக்கு பின் மீண்டும் பிக்பாஸ் வாய்ப்பு! சாதிப்பாரா அஸீம்?
அஸீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே, முதல்தடவை அல்ல. சீசன் 4-லேயே அஸீம் பிக்பாஸ் வீட்டில் நுழைய இருந்தார். அதற்காக குவாரண்டைனும் சென்றார். பகல்நிலவு தொடரில் அஸீம் - ஷிவாணி காம்போ அதிகமாக ரீச் ஆனதால் அவர் அந்த சீசனில் கட்டாயம் கலந்துகொள்வார், பிக்பாஸ் வீட்டிலும் அவர்கள் காதல் கெமிஸ்ட்ரி தொடரும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அவருக்கு அந்த சீசனில் ஏனோ சில காரணங்களால் இடம் கிடைக்கவில்லை.
தொடர்ந்து சீசன் 5ன் போதும் அவர் பெயர் அடிபட்டது. ஆனால், அப்போது அஸீம் "பூவே உனக்காக" தொடரில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போது சீசன் 6-ல் கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. பூவே உனக்காக தொடரும் அண்மையில் முடிந்துவிட்ட நிலையில் புதிய ப்ராஜெக்ட் எதிலும் கமிட்டாகாத அஸீம், பிக்பாஸ் சீசன் 6-ல் என்ட்ரியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏற்கனவே, இருமுறை தவறவிட்ட வாய்ப்பு அஸீமுக்கு மீண்டும் தேடி வந்துள்ளது. எனவே, இந்த வாய்ப்பை அஸீம் சரியாக பயன்படுத்திக் கொள்வாரா? என்பதை பார்க்க அவரது ரசிகர்களும் மற்ற பிக்பாஸ் நேயர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!