குக் வித் கோமாளியில் ஏமாற்றத்துடன் எலிமினேட் ஆன ராஜ் ஐயப்பா!
மார் 30, 2023
குக் வித் கோமாளி சீசன் 4-ல் இந்த வார எலிமினேஷனாக நடிகர் ராஜ் ஐயப்பா வெளியேற்றப்பட்டுள்ளார். அஜித் குமாரின் நண்பரின் மகனான ராஜ் ஐயப்பாவை இயக்குனர் சாம் ஆண்டன் "100" படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு வலிமை படத்திலும் அஜித்துக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு ராஜுக்கு கிடைத்தது. இரண்டு படங்களிலுமே ராஜ் ஐயப்பாவின் நடிப்பு பாராட்டிய பலரும் தமிழ் திரையுலகில் நிச்சயமாக இவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரியானார் ராஜ். முந்தைய சீசன்களில் இந்நிகழ்ச்சியின் மூலம் அதிக புகழ் பெற்ற அஸ்வின், தர்ஷன் போலவே ராஜ் ஐயப்பாவுக்கும் இறுதி வரை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாரத்திலேயே ராஜ் ஐயப்பா எலிமினேஷன் ஆகிவிட்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் இப்படி ஏமாற்றத்துடன் வெளியேறிவிட்டாரே என ரசிகர்கள் அவருக்காக பரிதாபப்பட்டு வருகின்றனர்

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!