
ஹுசைன் மீது எப்படி காதல் வந்தது? மணிமேகலையின் லவ் ஸ்டோரி
மணிமேகலை - ஹுசைன் காதல் எப்படி மலர்ந்தது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பல காலங்களாக எழுந்து வருகிறது. தற்போது இதற்கு விடையளித்துள்ள மணிமேகலை, "மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில ஆடலுடன் பாடலை கேட்டு என்கிற ரீமிக்ஸ் பாடலுக்கு லாரன்ஸ் மாஸ்டருடன் சேர்ந்து ஹுசைன் சில ஸ்டெப்ஸ் ஆடியிருப்பார். அந்த பாடல் வரும்போதெல்லாம் இவர் டான்ஸ் பார்த்து இந்த பையன் சூப்பரா ஆடுறான்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கும்.
தொடர்ந்து பாத்துட்டே இருந்ததால எப்படியாச்சும் இவர பாரட்டனும்னு ஆசை வந்துச்சு. சிலர் பேர்கிட்ட நம்பர் கேட்டேன். அப்போதான் இவர் முஸ்லீம்னு தெரிஞ்சுது. போன் பண்ணலாமா வேண்டாமான்னு ஒரு மணி நேரம் யோசிச்சேன். அப்புறம் நைட் 11 மணிக்கு கால் பண்ணேன். அப்பவே இவர் பெயரை என் போன்ல கிரஷ்ன்னு சேவ் பண்ணிட்டேன்" என்று ஹுசைன் மீது காதல் மலர்ந்த தருணத்தை மணிமேகலை கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!