
சென்னையில் அபார்ட்மெண்ட் வாங்கிய மணிமேகலை
டிச 07, 2024
Advertisement
சின்னத்திரை பிரபலமான மணிமேகலை, உசேன் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டாலும் இப்போது தனது திறமையால் அடுத்தடுத்த வெற்றிபடிக்கட்டுகளில் அடியெடுத்து வைக்கிறார். சிறிது காலம் முன் சொந்தமாக பண்ணை வீட்டை கட்டி வந்த மணிமேகலை தற்போது சென்னையிலேயே சொந்தமாக ப்ரீமியம் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறார். இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மணிமேகலை, "திருமணமான புதிதில் வீட்டு வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம். இன்று சென்னையில் ப்ரீமியம் அப்பார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறோம்" என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து மணிமேகலை - உசேன் தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!