தவறாக எதையும் பரப்பாதீர்கள் : கணவர் இறந்த துக்கத்துடன் ஸ்ருதி சண்முகப்பிரியா வெளியிட்ட வீடியோ!
ஆக 05, 2023
Advertisement
சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியா தான் காதலித்து வந்த அரவிந்த் சேகர் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒருவருடம் மட்டும் ஆகியுள்ள நிலையில் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதனையடுத்து செய்தி ஊடகங்களில் பல்வேறு வதந்திகளுடன் செய்தி வெளியாகி வந்தது. இதனால் வருத்தமடைந்த ஸ்ருதி சண்முகம் வதந்திகளை பரப்பாதீர்கள் என வீடியோ மெசேஜ் வெளியிட்டார்.
அதில், "என் கணவர் கார்டியாக் அரஸ்ட் காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் பாடி பில்டர் அல்ல. அவர் ஒரு சிவில் என்ஜினியர். பாடி பில்டிங்கை பேஷனாக எடுத்துக்கொண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றார். ஆனால், என் கணவர் இறப்பு குறித்து செய்தி ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உங்களுக்கு விவரங்கள் வேண்டுமென்றால் என்னுடைய இந்த வீடியோவை எடுத்துக்கொள்ளுங்கள். தவறாக எதையும் பரப்பாதீர்கள் " என அந்த வீடியோவில் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!