
கனா சீரியலிலிருந்து வெளியேறிய தர்ஷனா
மார் 06, 2024
Advertisement
வெள்ளித்திரையில் வெளியான கனா படத்தின் கதையை மையமாக வைத்து சில மாற்றங்களுடன் கனா என்கிற சின்னத்திரை தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் தடகள வீராங்கனையாக சாதிக்க துடிக்கும் ஏழை கிராமத்து பெண் அன்பரசியாக தர்ஷனா அசோகன் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக விஷ்ணு உன்னி கிருஷ்ணன் ஹீரோவாக நடித்து வருகிறார். மக்களின் பேராதரவுடன் இந்த தொடர் 450 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், நாயகி தர்ஷனா திடீரென இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த செய்தியானது தர்ஷனாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!