
சைத்ரா ரெட்டியின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா?
நாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி தமிழ் குடும்பங்களில் பலரது வீட்டில் செல்ல மகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் தனது பசுந்தோல் போத்திய வில்லத்தனமான நடிப்பால் முத்துராமனும் நடிப்பில் டப் கொடுத்து வருகிறார்.
தற்போது கயல் தொடரில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நாயகியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும், நாயகன் சஞ்சீவ் ரூ.20 ஆயிரமும், வில்லன் பெரியப்பா முத்துராமன் ரூ. 15 ஆயிரமும் சம்பளமாக பெற்று வருகின்றனர். அதிலும் தற்போது சைத்ரா அஜித்தின் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரும்பியிருப்பதால் அவர் அதிக சம்பளம் கேட்க வாய்ப்புள்ளதாகவும் சின்னத்திரை வட்டாரங்களில் ஒரு பேச்சு வலம் வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!