
ரிஸ்க்கான ஸ்டன்ட் காட்சியில் நடித்த சைத்ரா ரெட்டி
ஜன 08, 2024
Advertisement
சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் அர்ப்பணிப்புடன் நடித்து தமிழ் சின்னத்திரையுலகில் முன்னணி நடிகையாக இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்த சைத்ரா, கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கயிற்றில் தொங்கி ரிஸ்க்கான சண்டை காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் அவர், ஒரு விபத்து காட்சிக்காக ரிஸ்க்கான ஸ்டன்ட் சீனில் நடித்துள்ளார். அந்த வீடியோவானது தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில் சைத்ராவின் அர்ப்பணிப்பான நடிப்பை ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!