
ஆளேமாறிப்போன அமித்பார்கவ்
அக் 08, 2022
தென்னிந்திய மொழிகளில் சினிமா மற்றும் சீரியல்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் அமித்பார்கவ். தவிர, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார். கடைசியாக ஜீ தமிழில் வெளியான திருமதி ஹிட்லர் என்ற தொடரில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றிருந்தார். அதன்பிறகு புதிய ப்ராஜெக்ட் எதிலும் கமிட்டானதாக தெரியவில்லை. சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பிட்னஸ் சேலஞ்ஜ் எடுத்துக்கொண்டு 3 மாதங்களில் உடம்பை ட்ரிம் செய்து அசத்தலான தோற்றத்திற்கு மாறினார். தற்போது தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு செம ஹேண்ட்சம்மாக ஹீரோ லுக்கில் இருக்கிறார் அமித். இதனால் ரசிகர்கள் சிலர், "என்ன சார் சினிமால ஹீரோ ஆகிட்டீங்களா? அதான் சீரியல் பக்கம் வர்றதில்லையா?" என ஆவலாக கேட்டு வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!