தி பிரெய்ன் : சிபிஐ-5ஆம் பாக டைட்டில் வெளியானது
பிப் 26, 2022
Advertisement
மலையாள சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் தான் 1988-ல் வெளியான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு. சொல்லப்போனால் இந்த படம் தான் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் மம்முட்டியை கொண்டு சேர்த்தது. அதன்பிறகு இந்தப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் ஜாக்ரதா, சேதுராம ஐயர் சிபிஐ, நேரறியான் சிபிஐ என என்கிற பெயர்களில் இந்த 34 வருடங்களில் வெளியாகியுள்ளன.
இந்த நான்கு பாகங்களையும் இயக்கியவர் இயக்குனர் மது.. தமிழில் மௌனம் சம்மதம் என்கிற படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த நான்கு பாகங்களுக்கும் கதை எழுதியவர் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி. தற்போது பதினைந்து வருட இடைவெளிக்கு பிறகு இதே கூட்டணியில் இந்தப்படத்தின் 5ஆம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப்படத்திற்கு தற்போது "தி பிரெய்ன்" என டைட்டில் வைத்து அதிகாரப்பூர்வ போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!