
படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? இயக்குனரை மிரட்டிய நடிகர் ஜெயசூர்யா
கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு விட்டு விட்டு நடைபெறுகிறது. அதேசமயம் இதற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசூர்யாவின் "ஆடு 3" திரைப்படம் வெளியாகி 100 கோடி வசூலித்தது. அதன் பிறகு ஒப்புக்கொண்டு நடித்த "ஆபரேஷன் டிரால்" திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தான் நடிகர் ஜெயசூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் ரோஜின் தாமஸிடம் கேக் வெட்ட உதவும் கத்தியை காட்டி மிரட்டும் இரண்டு புகைப்படங்களையும், அதன் கூடவே "கத்தனார் படத்தை எப்போது ரிலீஸ் செய்யப் போகிறீர்களா? இல்லை இந்த கத்தியை நான் ரிலீஸ் செய்யட்டுமா?" என்று வேடிக்கையாக கேட்பது போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த பட ரிலீஸ் குறித்த ரசிகர்களின் மனநிலையைத்தான் அவர் இப்படி கேள்வியாக எழுப்பியுள்ளார். அதற்கு இயக்குனர் ரோஜின் தாமஸ் அதே பாணியில் நகைச்சுவையுடன், "இப்போதைக்கு ரிலீஸ் தேதியை வெளிப்படுத்த முடியாது, விரைவில் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!