
தெலுங்கில் தயாரிப்பாளர்கள் - தியேட்டர்காரர்கள் மோதல்
அது சம்பந்தமாக நேற்று தெலங்கானா பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸின் பொதுக்குழு கூடியது. ஓடிடி தளங்களில் திரைப்படங்களை நேரடியாக வெளியிடக் கொடுப்பதை அக்டோபர் வரையில் நிறுத்த வேண்டும். தியேட்டர்களும் திரையுலகத்தில் ஒருங்கிணைந்த ஒன்று தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கில் சில பெரிய நடிகர்களின் படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த வருடம் சூர்யா நடித்த "சூரரைப் போற்று" படம் வந்த போது இங்குள்ள தியேட்டர்காரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தற்போது யாரும் அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!