
மாஸ்டர் ஆஸ்திரேலியா தியேட்டர்கள் பட்டியல்
"மாஸ்டர்" படம் தான் சுமார் பத்து மாத இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் முதல் பெரிய திரைப்படமாக அமைய போகிறது. இப்படத்தை உலகம் முழுவதும் பல தியேட்டர்களில் வெளியிட முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
வெளிநாடுகளில் அமெரிக்கா தான் ஒரு பெரிய எதிர்பார்ப்பை எப்போதும் ஏற்படுத்தும். அங்கு இதுவரையில் சுமார் 100 தியேட்டர்கள் வரையில் "மாஸ்டர்" படத்தை வெளியிட உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அந்த எண்ணிக்கை அதிகமாகி அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியாகலாம்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவில் சுமார் 70 தியேட்டர்கள் வரையில் இப்படத்தை வெளியிட உறுதி செய்து பட்டியலையும் வெளியிட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லேன்ட், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய அனைத்து மாநிலங்களிலும் "மாஸ்டர்" வெளியாகிறது. தியேட்டர்களின் எண்ணிக்கை இன்னும் கூடவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!