
தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி, ஆதரவும் எதிர்ப்பும்..
இந்நிலையில் 100 சதவீத இருக்கை அனுமதியை அரசு வழங்கியதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. திரையுலகினரில் அனைவருமே இந்த 100 சதவீத அனுமதியை ஆதரித்து தொடர்ந்து பேசி வருகின்றனர்.
நடிகை குஷ்பு, “தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களை வழங்குவது முதன்மையான பொறுப்பாக இருக்கும். இதில் மாற்றுக் கருத்துள்ளவர்கள் தயவு செய்து தியேட்டர்களுக்குப் போக வேண்டாம்,” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் சிலர், வெளி இடங்களில் மக்கள் நடமாடும் போது அவ்வளவாக பிரச்சினை வராது. ஆனால், மூடப்பட்ட அரங்கிற்குள் மூன்று மணி நேரம் எந்த சமூக இடைவெளி இல்லாமல் அமர்வது கொரானோ பரவலுக்கு வழி வகுக்கும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதனால், நேற்று அரசு உத்தரவிட்ட பிறகு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். மக்களின் மனநிலை என்னவென்பதை "மாஸ்டர், ஈஸ்வரன்" ஆகிய புதிய படங்கள்" வெளிவந்த பிறகு அதற்கு மக்கள் வருகை புரிவதை வைத்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மக்களின் தீர்ப்பை இதில் இறுதியான தீர்ப்பு என்பது மட்டும் உறுதி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!