மாஸ்டர் செல்பிக்கு ஒரு வருடக் கொண்டாட்டம்
பிப் 09, 2021
Advertisement
ஒரு படத்திற்குத்தான் முதல் வருடக் கொண்டாட்டம் முதல் அடுத்தடுத்த வருடக் கொண்டாட்டம் என ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், ஒரு செல்பி புகைப்படத்திற்குக் கூட முதல் வருடக் கொண்டாட்டம் என்பது கொஞ்சம் ஓவர் தான்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நெய்வேலியில் "மாஸ்டர்" படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, தன்னுடைய ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவில் விஜய் ஒரு செல்பி போட்டோவை எடுத்தார். அதை பிப்ரவரி 10ம் தேதியன்று விஜய் என்ற பெயரில் ரசிகர்கள் நிர்வகிக்கும் டுவிட்டர் கணக்கில் பதிவிட்டார்கள்.
2020ம் ஆண்டில் ஒரு பிரபலத்தின் அதிகப்படியான ரிடுவீட் பெற்ற டுவீட் என்ற சாதனையை அந்த டுவீட் பெற்றது. 1 லட்சத்து 55 ஆயிரம் முறை அந்த டுவீட் சாதனை படைத்தது. தற்போது அது 1 லட்சத்து 64 ஆயிரம் ரிடுவீட்டாக உயர்ந்துள்ளது.
அந்த டுவீட்டின் ஒரு வருடக் கொண்டாட்டத்தைத்தான் விஜய் ரசிகர்கள் தற்போது #1YearOfMasterSelfie என்ற ஹேஷ்டேக்குடன் டுவிட்டரில் டிரெண்டிங்குடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!