தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா
Advertisement
Advertisement
தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா
மார் 28, 2026
அ நிறம் | அளவு
Advertisement
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோழிகளுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார் யாஷிகா ஆனந்த். அதில் அவரது தோழி ஒருவர் உயிரிழந்தார். அதிலிருந்து மீண்டு தற்போது மறுபடியும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார் யாஷிகா. இந்நிலையில் தனது கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கும் அவர் , தற்போது தனது இடது கையில் கட்டு போட்டு இருக்கும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில், தோழிகளுடன் பால் விளையாடியபோது தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!