பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு
Advertisement
Advertisement
பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு
மார் 28, 2026
அ நிறம் | அளவு
Advertisement
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கர. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த சில தினங்களாக இந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு வந்தது படக்குழு. அதில், தனுஷ் -கர, மமிதா பைஜூ -செல்லி, சுராஜ் வெஞ்சரமூடு -பரதன், கே.எஸ்.ரவிக்குமார்- கந்தசாமி, ஸ்ரீஜா ரவி -தனம், கருணாஸ்- காசி மாயன், பிருத்வி பாண்டியராஜ் -முருகேசன் ஆகிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு வந்தார்கள். இந்நிலையில் தற்போது கர படத்தின் முகங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில், இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள அனைத்து கேரக்டர்களின் காட்சிகளையும் இணைத்து ஒரு டீசர் மாதிரியான முன்னோட்டமாக வெளியிட்டுள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!