பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம்
மே 16, 2026
Advertisement
ஸ்டூடியோவிற்குள் முடங்கிக் கிடந்த சினிமா அதை விட்டு வெளியேறியபோது. இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை தேடிச் சென்றது. ஊட்டி, கொடைக்கானல், மைசூர் பிருந்தாவனம் என சுற்றியபோது இயக்குனர் கே.சுப்ரமணியம் கண்டுபிடித்த புதிய இடம் மூணார். அந்த இடத்தில் முதன் முறையாக தனது கடைசி படமான "பாண்டித்தேவன்" படத்தை எடுத்தார். அதற்கு பிறகு மூணார் பிரபலமாகி அதன்பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் அங்கு எடுக்கப்பட்டது.
"பாண்டித்தேவன்" படம் அங்கு எடுக்கப்பட்டபோது ஒரு சாலை வளைவில் ஒரு விபத்து ஏற்பட்டு நிறைய பேர் காயம் அடைந்தனர். உள்ளூர் மக்களே அவர்களை காப்பாற்றி சிகிச்சை அளித்தனர். இது அப்போது பரவலாக பேசப்பட்டது. அன்று முதல் விபத்து நடந்த இடம் "பாண்டித்தேவன் வளைவு" என்று இப்போதும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.
"பாண்டித்தேவன்" படத்தில் எம்.ஜி.சக்கரபாணி, ராஜசுலோச்சனா, டி.கே.பாலச்சந்திரன், பி.எஸ்.சரோஜா, அசோகன், சந்திரபாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்திரபாவுவின் புகழ்பெற்ற பாடலான "சொல்லுறத சொல்லிபுட்டேன்" என்ற பாடல் இந்த படத்தில்தான் இடம்பெற்றது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!