
பவழ மல்லி Vs முட்டை கலக்கி - யூத்களுக்குள் கடும் போட்டி
இப்போதைக்கு இரண்டு "யூத்தான" பாடல்கள்தான் கடும் போட்டியில் உள்ளன. ஒரு பாடல் "யூத்" படத்தில் இடம் பெற்ற "முட்டை கலக்கி", மற்றொரு பாடல் "பவழ மல்லி" வீடியோ பாடல்.
யூத் படப் பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார். "பவழ மல்லி" பாடலுக்கு சாய் அபயங்கர் இசையமைத்து நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பாட, விவேக் எழுதியுள்ளார். பாடலுக்கு சாய் அபயங்கர், கயடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர். இரண்டு பாடல்களின் "மேக்கர்கள், நடிகர்கள்" யூத்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
"யூத்" படத்தின் "முட்டை கலக்கி" பாடல் 64 மில்லியன் பார்வைகளைக் கடந்து "குளோபல் டாப் மியூசிக் வீடியோ"வில் 4வது இடத்தில் உள்ளது. "பவழ மல்லி" பாடல் 63 மில்லியன் பார்வைகளைக் கடந்து "குளோபல் டாப் மியூசிக் வீடியோ"வில் 11வது இடத்திலும் உள்ளன. இரண்டில் எந்தப் பாடல் முதலில் 100 மில்லியனைக் கடக்கிறதோ அதுதான் வின்னர் என்று வைத்துக் கொள்வோமா ?.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!