
பைசன் முதல் பார்வை வெளியானது
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. கபடி வீரராக இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கின்றார். மாரி செல்வராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பைசன் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில் அவர், " நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும். ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும். வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும். ஆதலால் நீ கதவுகளை அடைக்கிறாய். நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார் மாரி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!