
மலேசிய பிரதமரை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட தற்போது ரஹ்மான் மலேசியா சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சந்தித்த அவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்.
பின்னர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து "எக்ஸ்" தளத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், "மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். இந்த சந்திப்பின்போது இசை, கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம் பற்றி உரையாடினோம்" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு "இந்தியன் 2" புரமோசன் பணிகளுக்காக மலேசியா சென்ற கமல்ஹாசன், மலேசிய பிரதமரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!