
குணா மறுவெளியீட்டுக்கு கோர்ட் தடை
33 வருடங்கள் கடந்த நிலையில் மலையாள படமான "மஞ்சுமல் பாய்ஸ்" குணாவை மீண்டும் நினைவூட்டியது. கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர்.
இந்த படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு கடந்த ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், "குணா" படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "குணா" படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்தது. மேலும், இந்த மனுவுக்கு ஜூலை 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!