
விஜய்யின் கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?
கோட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. விஜய்யுடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதாகவும், அதற்காகவே அவரை ஒரு காட்சியில் வெங்கட் பிரபு நடிக்க வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பதாக ஆரம்பத்தில் ஒரு தகவல் வெளியாகி வந்தது. பின்னர் அது வதந்தி ஆகிவிட்டது. அதேபோல்தான் இந்த செய்தியும் இருக்குமா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!